Friday, 18 January 2013

நல்ல நண்பன் - நண்பன்


நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணம் நினைக்கின்றதா!
சிறந்தவன் நீ தான் என்று
உன்னைக் கூட்டி செல்ல துடிக்கின்றதா!
இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் திண்பதா?
இவன் சிரித்து பேசும் ஒலி
அதை வேண்டினோம் மீண்டும் தா?
—-
உன் நினைவின் தாவாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா?
மனமென்னும் மே வானத்தில்
எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா?
இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா?
தாய் இவள் அழுகுரல்
கேட்ட பின்பும் உறக்கமா?
—-
வா நண்பன் வா நண்பா
தோள்களில் சாயவா!
வாழ்ந்திடும் நாளெல்லாம்
நான் உன்னை தாங்கவா!

No comments:

Post a Comment