Tuesday 22 January 2013

காதலிக்கும் பெண்ணின் - காதலன்


காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்சம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ம்ம் பூமியின் பூபாளமே
(காதலின்..)

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் ல‌ட்ச ரூபாய்
ம்ம் ம்ம்..
(காதலிக்கும்..)

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபட்சி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
இது நட்பமாந்தோ எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று..

No comments:

Post a Comment