Tuesday 27 February 2018

நெஞ்சில் மாமழை - நிமிர்

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
வந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வண்டு எங்கும் பூத்தாட
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
வந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வண்டு எங்கும் பூத்தாட

வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வாராமல் போகும் நாட்கள் வீணென
வம்பாக சண்டை போட வாய்க்குது

சொல்ல போனால் என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான்
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
வந்து வானம் கூத்தாட

பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே
பேசாமல் மாற்றி கொள்ள தோன்றுமே
பெண்கள் இல்ல என் வீட்டிலே
பதம் வைத்து நீயும் வர வேண்டும்
தென்றல் இல்லா என் தோட்டத்தில்
உன்னால்தானே காற்று வரும் மீண்டும்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
வந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வண்டு எங்கும் பூத்தாட
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது

எப்போதும் உன்மேல் ஞாபகம் - நிமிர்


எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
அருகில் வா என அழைக்கவா
விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும்

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்

அந்தி வெயில் அடங்கையில் நானும் நீயும் பேசணும்
சத்தம் இடும் வளையலை சங்கம் வைத்து தீர்க்கணும்
பக்கத்திலே வந்து வெக்கத்தையும் தந்து
சொக்க வைத்தாய் என் அன்பே
சேலை போலே நானும் தோளில் சரியணும்

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
அருகில் வா என அழைக்கவா
விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும்

என்ன இது உயிரிலே ஊஞ்சல் ஒன்று ஆடுதே
எங்கிருந்தோ உடலையும் காய்ச்சல் வந்து மூடுதே
பத்து விரல் தேயும் நித்திரையும் போகும்
எத்தனை நாள் இந்த வாதை
தென்றல் கூட கருணை கொண்டு தழுவுதே

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்
அருகில் வா என அழைக்கவா
விரல் கோர்க்கணும் தோள் சாய்க்கணும்

எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்
அன்றாடம் உன்னை பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கணும்



காதல் கப்பல் - இறைவி


கண்ணக் காட்டி முறைச்சா
ஒத்த வாட்டி சிரிச்சாப் போதும்
சொச்ச காலம் இனிக்கும்
பச்சை வாழை துளுக்கும் நேரம்
உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன செய்ய
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல

ஏன் கண்ணே நெருப்பா கோபம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஏய்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்

மொத்தமாக எனக்கு
உன்னத்தானே பிடிக்கும் மோகம்
உன்னத்தேடி துடிக்க ரத்த நாடி வெடிச்சுத் தாவும்
மல்லுக்கு வேணா மனசிங்கு சேர
மன்னிச்சுப் போனா தப்பு இல்ல
பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள

அட ஏன் கண்ணே
நெருப்பாய் கோபம்
அட நீ என்ன
வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி
போவோமா ஏய்

கொத்துக் கொத்தா அழக
கொட்டி வச்சா வழியும்
அங்க தானே ரதியா நீ இருப்ப
நித்தம் உன்னில் கலந்து நித்திரையும் மறந்து
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்

ஏய் உன்னாலத்தானே
மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா
என்ன செய்ய
பல்லக்கு தூக்கும்
வரம் ஒன்னு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள
அட ஏன் கண்ணே
நெருப்பாய் கோபம்
அட நீ என்ன
வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி
போவோமா ஏய்

காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்


இது நாள் வரையில் - அச்சம் என்பது மடமையடா


இது நாள் வரையில்
உலகில் எதுவும்
அழகில்லை என்றேன்
எனை ஓங்கி அறைந்தாளே
குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தாளே
இன்றெந்தன் வீட்டின்
கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்துச்
சொன்னேனே ஏ

இதுவரை ஏதுமே உலகில்
அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்
இதுவரை ஏதுமே
மொழியில் சுவை
இல்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள்
இதுவரை காற்றிலே
தூய்மை இல்லை
என்றேனே அனைத்தையும்
பொய் ஆக்கினாள்
ஓ மெத்தை மேலே வான்
மேகம் ஒன்று
உட்கார்ந்து கொண்டு உன்
கண்ணை பார்த்தால்
அய் அய் அய்யய்யோ
இனிமேல் நீ என்ன
செய்வாயோ?
என் வாழ்க்கை முன் போல்
இல்லை
அதனால் என்ன
பரவாயில்லை
இனிமேல் நீ என்ன
செய்வாயோ?......
இதுவரை ஏதுமே உலகில்
அழகில்லை
என்று நான் நினைத்ததை
பொய் ஆக்கினாள் ஆ

அழகில்லை என்றேன் நான்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
இசை சுகம் இல்லை
என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
மொழியில் சுவை
இல்லை என்றேன்
அதை அவள் பொய்
ஆக்கினாள்
அவள் அவள் அவள் அவள்
பொய் ஆக்கினாள்
அவள் அவள் அவள், அவள்
அவள் அவள்

அவளும் நானும் - அச்சம் என்பது மடமையடா


அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

மீனும் புனலும்..  விண்ணும் விரிவும்..
வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..
ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..
பாட்டும் உரையும்.. நானும் அவளும்..

நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..
நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..
நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..

அவளும் நானும்..தேனும் இனிப்பும்..
அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..
அவளும் நானும்..திங்களும் குளிரும்..
அவளும் நானும்..கதிரும் ஒளியும்..

 அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அலையும் கடலும்..
அவளும் நானும்.. தவமும் அருளும்..
அவளும் நானும்.. வேரும் மரமும்..

ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..
அணியும் பணிவும்.. அவளும் நானும்..
அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..
அவளும் நானும்..அளித்தலும் புகழும்..

அவளும் நானும்.. அமுதும் தமிழும்..
அவளும் நானும்.. அமுதும் தமிழும்..

ராசாளி - அச்சம் என்பது மடமையடா


பறக்கும் ராசாளியே
ராசாளியே நில்லு
இங்கு நீ வேகமா?
நான் வேகமா?
சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பறவை போலாகினேன் போலாகினேன் இன்று
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று
ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பார்ப்போம் பார்ப்போம்
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
நான் குளிர்காய்கின்ற தீ
எட்டுத் திசை
முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும்
துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனே
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ
எட்டுத் திசை
முட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும்
துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல்
மனதினில் மடிவேனே
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம்
இது முடிந்திட விடுவேனோ
ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
 நின்னுக் கோரி
நின்னுக் கோரி
நின்னுக் கோரி
ஓ நான் உஷா
நின்னுக் கோரி உன்னோடுதான்
நின்னுக் கோரி கோரி
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை
தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய்
எனைத் தொடர்வதை
தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேனே

ராசாளி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ
என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ
குளிர்காய்கின்ற தீ
குளிர்காய்கின்ற தீ


தள்ளிப் போகாதே - அச்சம் என்பது மடமையடா


ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..

ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே

கண்ணெல்லாம்..
நீயேதான்..
நிற்கின்றாய்..
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..
இமை மூடிடு என்றேன்..

நகரும்
நொடிகள்
கசையடிப் போலே
முதுகின் மேலே
விழுவதினாலே
வரி வரிக் கவிதை..
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்
எனது.. !!

கடல் போல பெரிதாக நீ நின்றாய்..
சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன்.. பார்க்கிறேன்..
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று

ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே..
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..

கலாபம்
போலாடும்
கனவில் வாழ்கின்றனே..
கை நீட்டி
உன்னைத்
தீண்டவே பார்த்தேன்..
ஏன் அதில் தோற்றேன்.?
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது.?
தாமரை வேகுது..!

ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..

தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
(தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே )

தேகம் தடை இல்லை
என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்..
ஆனால் அது பொய் தான்
என நீயும்
அறிவாய் என்கின்றேன்..
அருகினில் வா..

ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...

கனவிலே தெரிந்தாய்..
விழித்ததும் ஒளிந்தாய்..
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..

கண்களில் ஏக்கம்..
காதலின் மயக்கம்..
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்..

நொடி நொடியாய் நேரம் குறைய..
என் காதல் ஆயுள் கறைய..
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..

விதியின் சதி விளையாடுதே..
எனை விட்டுப் பிரியாதன்பே..
எனை விட்டுப் பிரியாதன்பே..

ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே..