Tuesday 27 February 2018

காதல் கப்பல் - இறைவி


கண்ணக் காட்டி முறைச்சா
ஒத்த வாட்டி சிரிச்சாப் போதும்
சொச்ச காலம் இனிக்கும்
பச்சை வாழை துளுக்கும் நேரம்
உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா என்ன செய்ய
சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்
சில்லாகப் பேத்து என்னக் கொல்ல

ஏன் கண்ணே நெருப்பா கோபம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஏய்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்

மொத்தமாக எனக்கு
உன்னத்தானே பிடிக்கும் மோகம்
உன்னத்தேடி துடிக்க ரத்த நாடி வெடிச்சுத் தாவும்
மல்லுக்கு வேணா மனசிங்கு சேர
மன்னிச்சுப் போனா தப்பு இல்ல
பல்லக்கு தூக்கும் வரம் ஒன்னு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள

அட ஏன் கண்ணே
நெருப்பாய் கோபம்
அட நீ என்ன
வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி
போவோமா ஏய்

கொத்துக் கொத்தா அழக
கொட்டி வச்சா வழியும்
அங்க தானே ரதியா நீ இருப்ப
நித்தம் உன்னில் கலந்து நித்திரையும் மறந்து
அன்பு கொண்ட நதியில் நான் மிதப்பேன்

ஏய் உன்னாலத்தானே
மழை மேகம் பெய்யும்
இல்லாமப் போனா
என்ன செய்ய
பல்லக்கு தூக்கும்
வரம் ஒன்னு கேட்டேன்
நீதானே ராணி நெஞ்சுக்குள்ள
அட ஏன் கண்ணே
நெருப்பாய் கோபம்
அட நீ என்ன
வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி
போவோமா ஏய்

காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்


No comments:

Post a Comment