Monday 9 December 2013

பறவையே எங்கு - கற்றது தமிழ்

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் கைகள் சொல்வதுண்டோ
நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே


உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே ....
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே.....

ஏழை காதல் மலைகள்தனில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா

முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே....
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே.....

பார்வதி பார்வதி - காதலில் சொதப்புவது எப்படி

கல்லு மண்ணு காணும் முன்ன
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பொண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டுக் கெட்டாலும்
கிட்டத்தட்டச் செத்தாலும்
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்
காதலித்து சொதப்புவோம்!
காதலித்து சொதப்புவோம்!
டேய்.. விடுங்கடா
classஉக்குப் போய்படுங்கடா
என் கொடுமைய
பொலம்பத்தான் விடுங்கடா
போனதே போனதே ஆயிரங்-கால்
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்ஸெமெஸ்ஸை
குப்பை லாரி ஏத்தி விட்டாள்
it’s over… it’s over…
எல்லாமே is over…
status single மாற்றி விட்டாளே!
பார்வதிபார்வதி
பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதிபார்வதி
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதிபார்வதி
போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதிபார்வதி
காதலுக்கு கொள்ளியிட்டாளே
டேய்.. கடவுளே

உனக்கென்ன குற வெச்சேன்?
என் கதையில
tragedy ஏன் வர வெச்ச?
ஊரெலாம் சுத்திட யாரிருக்கா?
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யாரிருக்கா?
மூவி போக மூடு மாத்த யாரிருக்கா?
மோட்டிவேஷன் யாரிருக்கா?
it’s over… it’s over
எல்லாமே is over
என்று சொல்லி ஓடி விட்டாளே
பார்வதிபார்வதி
கும்பலோடு சுத்த விட்டாளே
பார்வதிபார்வதி
முத்தவிட்டு கத்த விட்டாளே
பார்வதிபார்வதி
சங்கு ஊதி மூடி விட்டாளே
பார்வதிபார்வதி
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே


அழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி

விழுந்தேனா? தொலைந்தேனா?
நிறையாமல் வழிந்தேனா?
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்,
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்.
காலில்லா ஆமை போலவே
காலம் ஓடுதே!
இங்கே உன் இன்மையை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே.
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணியே
இருதயம் துடிக்குதே!
அழைப்பாயா? அழைப்பாயா?
நொடியேனும் அழைப்பாயா?
பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே…!
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன் விடியாமலே…!
அழைப்பாயா?
நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்
நிலைமை தொடர்ந்தால்என்ன நான் ஆகுவேன்?
மறக்கும் முன்னே
அழைத்தால்பிழைப்பேன்
அழைப்பாயா? அழைப்பாயா?
அலைபேசி அழைப்பாயா?
தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே…!
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே…!
அழைப்பாயா?


ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூளும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே
வேறெதோநேருதே
அழைப்பாயா? அழைப்பாயா?
தவறாமல் அழைப்பாயா?
தவறாக அழைத்தாலே அது போதுமே…!
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே!
அழைப்பாயா?


ஓட ஓட ஓட - மயக்கம் என்ன

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல

ப்ரீயா சுத்தும் போது பிகரு இல்லையே
புடிச்ச பிகரு இப்போ ப்ரீயா இல்லையே
கைல பேட் இருக்கு பாலு இல்லையே
லைப் புல்லா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ் கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது

கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்
குண்டு சட்டியில ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன் 


ஒரு பீச்சுல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல கழுத நான் இல்லையே
ஜானும் ஏறல ஏறல முழமா சறுக்குறேனே

கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்
ப்யூஸ் போனபின் பல்புக்கான ஸ்விட்ச தேடுறேன்

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல

ப்ரீயா சுத்தும் போது பிகரு இல்லையே
புடிச்ச பிகரு இப்போ ப்ரீயா இல்லையே
கைல பேட் இருக்கு பாலு இல்லையே
லைப் புல்லா இந்த தொல்லையே

நடு ராத்திரி படுத்தேன் எழுந்தேன் படுத்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீனா நீந்துறேன் நீந்துறேன் கடலும் சேரலயே
படகா போகுறேன் போகுறேன் கரையும் சேரலயே

கிராக்கா மாறிட்டேன் ஜோக்கர் ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்
ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல

ப்ரீயா சுத்தும் போது பிகரு இல்லையே
புடிச்ச பிகரு இப்போ ப்ரீயா இல்லையே
கைல பேட் இருக்கு பாலு இல்லையே
லைப் புல்லா இந்த தொல்லையே

உலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க பீஸ் கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது