Wednesday 1 May 2013

முதல் மழை - பீமா


முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ம்ம் இதமாய் மிதந்ததே

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம்நின்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்

முதல் மழை எனை நனைத்ததே ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓ ஓ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே


பச்சை நிறமே


சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே
கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே

நீல வானம் - மன்மதன் அம்பு


நீ...ல வானம் நீ...யும் நானும்
கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய்
வைய்யமே கோயிலாய் வானமே வாயிலாய்
பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே
நீ...ல வானம் நீ...யும் நானும்

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம்தனை
நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம்தனை
காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
என்னை போலே பெண் குழந்தை
உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி
நீ...ல வானம் நீ...யும் நானும்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்

ஆராத காயங்களை ஆற்றும் நம் நேசம்தனை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தனை
செய்யும் விந்தை காதலுக்கு கை வந்ததொரு கலை தானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அது தானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர் தானடி
நீ...ல வானம் நீ...யும் நானும்


நீ காதலிக்கும் பொண்ணு - குட்டி



நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
Lets go...

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

அவ பார்க்கலேன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலை தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான் இங்கு இல்லையே
குத்திபுட்ட கை எடுக்காதே
அவ கொட்டினாலும் கோவ படாதே

லவ் லவ் லவ் போட்டி இல்லா லவ்
வேஷம் போடா தேவை இல்லை one side லவ்

Love love love வார்த்தை இல்லா love
கனவுகளே வாழ்த்த போகும் one side love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

என்ன ஒகே வா?

ஹே கைய தொட்டா முத்தமிட்டா
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே
அவ மேலே பட்ட காத்துக்காக அட
ஏங்கும் தான் one side காதலே
ஹே பத்து நாளு காத்திருப்பேனே
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிற்ப்பேனே

அவ திட்டினாலும் துப்பினாலும் கவலை இல்லையே
உள்ளங்கையில் வச்சிருப்போமே
அவளை நெஞ்சுக்குள்ளே தச்சிருப்போமே

Love love love காத்திருக்கும் love
கத்தியிலே கைய கீறும் one side love

Love love love தள்ளி போகும் love
மனமில்லே ரோஷமில்லே one side love

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே

தோண்ட தோண்ட ஆழம் போக
தண்ணியோட taste ரொம்ப ஜாஸ்திடா
ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி
வந்த காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா

தமிழகத்துல சோலி இல்லடா
நம்ம கிட்டே கட்டு கட்டா note-உம இல்லடா
வெறும் மனசை மட்டும் பார்த்து
காதலிக்க தான் கொஞ்சம் நீயும் time கொடேண்டா
அதுல வந்த காதல் பெறு சொல்லு டா

Love love love telephone booth love
அவ குரலை மட்டும் கேட்டு வைக்கும் one side love

Love love love புனிதமான love
எந்த ஆம்பளைக்கும் மொதல்லே வர்ற one side love

நிலா நீ வானம் - பொக்கிஷம்


நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கள் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

நான் போகிறேன் - நாணயம்


நான்  போகிறேன்  மேலே  மேலே
பூலோகமே  காலின்  கீழே
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே
பூ  வாளியின்  நீரை  போலே
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம்
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம்
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும்
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும் 

நான்  போகிறேன்  மேலே  மேலே 
பூலோகமே  காலின்  கீழே 
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே 
பூ  வாளியின்  நீரை  போலே 
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே 
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம் 
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம் 
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும் 
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும்

கண்ணாடி  முன்னே  நின்றே 
தனியாக  நான்  பேச 
யாரென்னும்  ஜன்னல்  தாண்டி  பார்த்தால்  ஐயோ 
உள்பக்கம்  தாழ்பாள்  போட்டும் 
அறையினுள்  நீ  வந்தாய் 
கை  நீட்டித்  தொட்டுப்  பார்த்தேன்  காற்றை  ஐயோ 

என்  வீட்டில்  நீயும்  வந்து  சேரும்  காலம்  எக்காலம் 
பூ  மாலை  செய்தேன்  வாடுதே 
என்  மெத்தை  தேடும்  போர்வை  யாவும்  சேலை  ஆகாதோ 
வாராதோ  அன்னாளும்  இன்று ,ஹானான்

என்  தூக்கம்  வேண்டும்  என்றாய் 
தரமாட்டேன்  என்றேனே 
கனவென்னும்  கள்ளச்சாவி  கொண்டே  வந்தாய் 
வார்த்தைகள்  தேடி  தேடி  நான்  பேசி  பார்த்தேனே 
மௌனத்தில்  பேசும்  வித்தை  நீதான்  தந்தாய்

அன்றாட  போகும்  பாதை  யாவும்  இன்று  மாற்றங்கள் 
காணாமல்  போனேன்  பாதியில் 
நீ  வந்து  என்னை  மீட்டி  செல்வாய்  என்று  இங்கேயே 
கால்  நோக  கால்  நோக  நின்றேனே

நான்  போகிறேன்  மேலே  மேலே 
பூலோகமே  காலின்  கீழே 
விண்மீன்களின்  கூட்டம்   என்  மேலே 

பூ  வாளியின்  நீரை  போலே 
நீ  சிந்தினாய்  எந்தன்  மேலே 
நான்  பூக்கிறேன்  பன்னீர்  பூ  போலே

ஆ ....
தடுமாறி  போனேன்  அன்றே  உன்னை  பார்த்த  நேரம் 
அடையாளம்  இல்லா  ஒன்றை  கண்டேன்  நெஞ்சின்  ஓரம் 
ஏன்  உன்னை  பார்த்தேன்  என்றே  உள்ளம்  கேள்வி  கேட்கும் 
ஆனாலும்  நெஞ்சம்  வந்து  நேரத்தை  நேசிக்கும்