Sunday 6 October 2013

கேளு மகனே - சொன்னா புரியாது

கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதைய கேளு
தெனம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு
அந்த நாள் கெழமை ஏழும் அவன் பறந்த கதைய கேளு
இப்போ பாழும் கெணத்தில் நாளும் அவன் விழுந்த கதைய கேளு
அட ராத்திரியானா அவ ஊத்தி கொடுப்பா
அதிகால விடிஞ்சா அவன் போத்தி படுப்பான்
ஒரு காதல் தொலைச்சு அவன் நெஞ்சு ஒடைஞ்சான்
ஒரு மூணு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதைய கேளு
தெனம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு
பஸ் ஏற டிக்கெட் கேட்ட புஸ்வாணமா பொங்கிடுவானே
பொண்ணு உள்ள இல்லைனாலும் ஜன்னலில தொங்கிடுவானே
அன்னிக்கவன் முடிய கலைசிட்டு அத ஸ்டைல்ன்னு சொன்னான்
இன்னிக்கவன் முடிய பிச்சிகிட்டு நடுத்தெருவில் நின்னான்
அதான் நம்ம சூப்பர் ஸ்டார் அன்னைக்கே சொன்னாரு
என்ன சொன்னாரு
அஜக்குன்னா அஜக்கு அட குமுக்குன்ன குமுக்கு
அஜக்குன்னா அஜக்கு அட குமுக்குன்ன குமுக்கு
அட கிரிக்கெட் எல்லாம் அவன் மூட்டை கட்டினான்
இப்போ மார்கெட் போய் தக்காளி வாங்கினான்
அங்க தண்ணி அடிச்சவன் இங்க தண்ணி அடிச்சான்
அந்த மூணு முடிச்சில் அவன் மொத்தம் தொலைஞ்சான்
கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதைய கேளு
தெனம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு
கண்ண கட்டி ரோட்டில் விட்டாலும் புள்ளைங்கள சைட் அடிப்பானே
ஒன்னேஒன்னு பெத்துகிட்டானே பொத்தி பொத்தி வைச்சுகிட்டானே
LKG இல் அவளை முதல் லோனு கேட்டான்
காலேஜ் விட்டு அவளும் வெளிவர பெரும் லோலுபட்டான்
மச்சி நீ மட்டும் ஒரு பேச்சிலரா இருந்தேனா வெச்சிக்கயேன்
உன் லைப் புல்லா அஜக்குன்னா அஜக்கு அட குமுக்குன்ன குமுக்கு
அஜக்குன்னா அஜக்கு அட குமுக்குன்ன குமுக்கு
ஒரு மாப்பிள்ளை தேடி அவன் கிழிஞ்சு போனானே
அந்த நூறு நாளுல நொந்து நூடில்ஸ் ஆனானே
அந்த அட்சத போட்டு கண்ணீரு வடிச்சான்
அந்த மூணு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்
கேளு மகனே கேளு ஒரு கொடுமை கதைய கேளு
தெனம் நிமிர்ந்து நடந்த ஆளு தல கவுந்த கதைய கேளு
அந்த நாள் கெழமை ஏழும் அவன் பறந்த கதைய கேளு
இப்போ பாழும் கெணத்தில் நாளும் அவன் விழுந்த கதைய கேளு
அட ராத்திரியானா அவ ஊத்தி கொடுப்பா
அதிகால விடிஞ்சா அவன் போத்தி படுப்பான்
ஒரு காதல் தொலைச்சு அவன் நெஞ்சு ஒடைஞ்சான்
ஒரு மூணு முடிச்சில் அவன் மொத்தம் முடிஞ்சான்

       


No comments:

Post a Comment