Friday 2 May 2014

கல்யாணமாம் கல்யாணம் - குக்கூ


காதல் கண்மணியே
கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம்
ஒன்னா சிரிச்சு மெய்யா பழகி கண்ணால் பேசி
காத்துக்கிடந்து ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து
உறங்கிடாமல் கனவும் கண்டு
கடைசி வரைக்கும் வருவதாக கதையும் விட்டாளே
இன்று அதனையெல்லாம் மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே
கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம்
காதல் கண்மணியே
கூற சேல மடிச்சு கட்டி
குங்குமபொட்ட நெத்தியில் வெச்சு
மணவறையில் அவ இருப்பா மகாராணியா
அவள காதலிச்சவன் கலங்கி நிப்பான் அப்புரானியா
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
கெட்டி மேளம் காத பொளக்க
நாதஸ்வரம் ஓங்கி ஒலிக்க
கச்சேரிய ரசிச்சிருப்பா ஊருமுன்னால
அவள காதலிச்சவன் கதறிடுவான் ஓசையில்லாம
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
சாதி சனத்த வணங்கிகிட்டு
சட்டுன்னு சட்டுன்னு சிரிச்சுகிட்டு
பரிசு பொருள வாங்கி வைப்பா ரொம்ப ஆசையா
அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான் சந்நியாசியா
வகைவகையா சமைச்சு வெச்சு
வாழ இலையில் பந்தியும் இட்டு
புருஷனுக்கு ஊட்டிவிடுவா போட்டோ புடிக்கத்தான்
அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டுவெடிக்கத்தான்
மங்கள தாலி கழுத்தில் ஆட
மந்திர வார்த்தை ஐயரும் ஓத
காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு
அவள காதலிச்சவன் வந்திடுவானே நடுரோட்டுக்கு
கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
காதல் கண்மணியே
கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம்
         


No comments:

Post a Comment