Saturday 22 June 2013

கனவிலே கனவிலே - நேபாளி

கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என் வாசமே என்னும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே

சிறு புன்னகையில் எனை வென்றுவிடும் அவள் தென்றலை
இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலை

காலை மாலை யாவுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே

இரவே பகலே இரவாய் தோன்றிடு
நிலவே நிலவே பகலை நீங்கிடு
மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
(கனவிலே..)

உடை தொட்ட இடம் விரல் தொட்டுவிட உயிர் கெஞ்சுமே
அடைப்பட்ட நதி உடைப்பட்டுவிட அலை பொங்குமே
வேகம் வீசும் பூவிலே நாளும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய் இமை நாங்கும் ஒளி சிந்துமே

எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலைந்தே ஓடுவோம்
பூக்கள் முழுவதும் மீண்டும் விரியுமே
கூட்டம் நடத்துமே பூக்கும் அழகிலே
(கனவிலே..)

No comments:

Post a Comment