Thursday 18 April 2013

அவ திரும்பி பார்த்து - கலகலப்பு


 உன்னோட பேச உன்னோட பழக
 உன்னோட சிரிக்க ஆசை இல்ல...
 உம் பேர கேக்க உன் கண்ண பாக்க
 உம் மனச இழுக்க ஏங்கவில்ல...
 நான் பார்த்ததிலே உன்னைப் போல யாருமில்ல

 அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்சா
 என் மனச கொஞ்சம் கொள்ளை அடிச்சா
 அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்சா
 என் மனச கொஞ்சம் கொள்ளை அடிச்சா
 எனக்கென்ன ஆச்சு அட தெரியவில்ல
 என் காலு தரையத் தான் தொடவுமில்ல
 எனக்கென்ன ஆச்சு அட தெரியவில்ல
 என் காலு தரையத் தான் தொடவுமில்ல

 என்ன பாத்துக்கிட்டே பாத்துக்கிட்டே நடக்குறா
 ஆனா பாக்காமலே போவது போல் நடிக்கிறா
 ஒரு பூனக்குட்டி போல என்ன மெரட்டுறா
 ஹையோ என்னென்னமோ பண்ணுறா

 அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்சா
 என் மனச கொஞ்சம் கொள்ளை அடிச்சா
 உன்னோட பேச உன்னோட பழக
 உன்னோட சிரிக்க ஆசை இல்ல...

 முன்கோப மூச்சழகா முத்து முத்து பேச்சழகா
 முல்லைச்சர பல்லழகா
 ஒண்ணும் புரியும்படி இல்ல
 எட்டாம் பிறை நிலவழகா ஏறு நெத்தி முகம் அழகா
 ஏழடுக்கு உடல் அழகா
 ஏதும் வெளங்கலியே உள்ள

 என்ன பெத்த மகராசி
 பாத்து வெச்ச சிலை போல ( போல )
 கண்ணு முன்ன வந்தாளே
 இனி செத்தாலும் இவ கூடத்தான்...

 என்ன பாத்துக்கிட்டே பாத்துக்கிட்டே நடக்குறா
 ஆனா பாக்காமலே போவது போல் நடிக்கிறா
 ஒரு பூனக்குட்டி போல என்ன மெரட்டுறா
 ஹையோ என்னென்னமோ பண்ணுறா ( இசை )

ரர ராத்தா ரா...  ரர ராத்தா ரார ரா
 னன னானா னா ன  னானா னா ன
 னானா னா...



எப்பவுமே இவ முகத்த
 பாத்துக்கிட்டே இருக்கணும் போல்
 நெஞ்சு வடம் தவிக்குதப்பா
 சுக அவஸ்தையின்னு சொன்னேன்
 கத்திரிக்கா நறுக்கையில அப்பளத்த பொரிக்கையில
 வாணலியில் வறுக்கையில
 இவ நெனப்பில் வெந்து நின்னேன்

 கும்பகோணம் காவேரி ( ஹா... ஹ )
 உன் காதில் ரகசியமா ( ம்... )
 என் காதல் சொல்லாதா அடி ஆத்தாடி என் ஆளு நீ...
 என் ஆளு நீ...

 என்ன பாத்துக்கிட்டே பாத்துக்கிட்டே நடக்குறா
 ஆனா பாக்காமலே போவது போல் நடிக்கிறா
 ஒரு பூனக்குட்டி போல என்ன மெரட்டுறா
 ஹையோ என்னென்னமோ பண்ணுறா

 அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்சா
 என் மனச கொஞ்சம் கொள்ளை அடிச்சா
 அவ திரும்பி திரும்பி பார்த்து சிரிச்சா
 என் மனச கொஞ்சம் கொள்ளை அடிச்சா
 எனக்கென்ன ஆச்சு அட தெரியவில்ல
 என் காலு தரையத் தான் தொடவுமில்ல
 எனக்கென்ன ஆச்சு அட தெரியவில்ல
 என் காலு தரையத் தான் தொடவுமில்ல ( இசை )

No comments:

Post a Comment