Tuesday 26 February 2013

உன்னை காணாது - விஸ்வரூபம்


உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்

உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேறில்லையே

நளினி மோகண சியாமள ரங்கா
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ பின் இருந்து வந்து எனை
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாய்யன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்றும் அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வேனடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா
காமக் கலைஞன் கண்ணா
கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா



No comments:

Post a Comment