Monday 4 February 2013

ஆஹா என்பார்கள் - வசீகரா


பேரழகி  என்றேதான்
பெண்  அவளை  சொன்னாலோ
சூரியனை  பிறை  என்று
சொல்லுவதை  போலே  ஆகும்

ஆஹா  என்பார்கள்
அடடா  என்பார்கள்
அவளை  பார்த்த  எல்லோரும்
மூன்றே  வினாடி
அவளை  கண்டாலே
நெஞ்சை  தாக்கும்  மின்சாரம்  (2)

மூச்சு  விடும்  ரோஜா  பூ
பார்த்ததில்லை  யாரும்தான்
அவளை  வந்து  பார்த்தாலே
அந்த  குறை  தீரும்தான்

ஆஹா  என்பார்கள் 
ரப்  பாப்  பா ....

ஹே , பதினேழு  வயது  முதல்  வரும்
பதினெட்டு  வயது  வரை  பெரும்
மாற்றங்கள்  அத்தனையும் அவள்
அழகை  கூட்டி  விடுதே
பார்வைக்கு  பட்ட  இடம்  அங்கும்
பார்க்காமல்  விட்ட  இடம்  எங்கும்
பாதாமின்  வண்ணம்  அது  பொங்கும்
கண்களுக்குள்  சூடுதே -ஏ -ஏ
ஒரு  ஐநூறு  நாளான  தேன்  ஆனது
அவள்  செந்தூரம் சேர்கின்ற  இதழ்  ஆனது
ஷாபப்ப .....
ஆஹா  என்பார்கள் 

ஹே   ஹே  ஹே , போர்க்கப்பல்  போல  இரு  இமை
மீன்  தொட்டி  போல  இரு  விழி
பால்  சிப்பி  போல  இரு  இதழ்
சேர்ந்த  அழகி  அவள்தான்
மின்காந்தம் போல  ஒரு  முகம்
ஊசிப்பூ  போல  ஒரு  இடை
தந்தத்தூண்  போல  ஒரு  உடல்
கொண்ட  மங்கை  அவள்தான்
அவள்  அழகென்ற  வார்த்தைக்கு  அகராதிதான்
நான்  சொல்கின்ற  எல்லாமே  ஒரு  பாதிதான் 

ஆஹா  என்பார்கள்
அடடா  என்பார்கள்
அவளை  பார்த்த  எல்லோரும்
மூன்றே  வினாடி
அவளை  கண்டாலே
நெஞ்சை  தாக்கும்  மின்சாரம்

மூச்சு  விடும்  ரோஜா  பூ
பார்த்ததில்லை  யாரும்தான்
அவளை  வந்து  பார்த்தாலே
அந்த  குறை  தீரும்தான்

ரப்  பாப்  பா .... 

No comments:

Post a Comment