Saturday, 22 June 2013

ஓ பேபி பேபி - காதலுக்கு மரியாதை

விழியில் விழி மோதி இதயக் கதவு இன்று திறந்ததே..
இரவு பகலாக இதயம்; கிளியாகிப் பறந்ததே..
ஏ.. காதல் நெஞ்சே.. யாரோடு சொல்வேன்..
வந்து போன தேவதைநெஞ்சை அள்ளிப் போனதே..
நெஞ்சை அள்ளிப் போனதே..
(விஐய்)
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..
ஒரு பார்வை வீசிச் சென்றால்.. உலகம் விடிந்ததெங்கே..
வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
(இசை)
பார்வை விழுந்ததும்.. உயிர்வரிகள் தேகம் நனைந்தது..
ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது..
நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை..
காற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை..
ஹோ.. இருதயம் இருபக்கம் துடிக்குதே..
அலைவந்து அலைவந்து அடிக்குதே..
எனக்குள்ளே தான்….
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..
(இசை)
ஜீவன் மலர்ந்தது.. புது சுகம் எங்கும் வளர்ந்தது..
தெய்வம் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது..
ஊரைக் கேட்கவில்லை.. பேரும் தேவையில்லை..
காலம் தேசம் எல்லாம்.. காதல் பாணியில்லை..
ஓ.. தேவதை தரிசனம் கிடைத்ததே..
ஆலய மணி இங்கு ஒலித்ததே..
என்னைத் தந்தேன்..
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..
ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே..
வார்த்தை பேசவில்லை.. எல்லாம் புரிந்ததெங்கே..
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்..
ஓ பேபி.. பேபி.. என் தேவ தேவி..
ஓ பேபி.. பேபி.. என் காதல் ஜோதி..“”"


Sunday, 16 June 2013

காதல் என்னுளே - நேரம்

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்
உன் முகதசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் உன்னுள்ளே
நானும் வந்தால் மெதுவாய் சரியாய் அது போகாதா

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்

வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லையென்றால் தவிப்பேன்
வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்
என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிஞ்சாலும்
உன் அன்பு வந்த பின்னே நாலும் மாறி போகும்
என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா

காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ

நிஜமெல்லாம் மறந்துபோச்சு - எதிர்நீச்சல்

நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தாரதே பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்மா 
ஏதேதோ நெஞ்சுக்குள் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் எண்ணங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் செத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சி விளக்க சுடுது
வெவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பாக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தாராதே பெண்ணே போதும்

நெஞ்சம் எல்லாம் மரந்து போச்சு
நிரை மாதம் நிலவை காணம்
பெண்ணே உன்னாலே...


Wednesday, 1 May 2013

முதல் மழை - பீமா


முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ம்ம் இதமாய் மிதந்ததே

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம்நின்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்

முதல் மழை எனை நனைத்ததே ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓ ஓ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே


பச்சை நிறமே


சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே
கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்
இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே
சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே