Tuesday, 26 February 2013

தாக்குதே கண் - பாணா காத்தாடி


தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்றதை தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில்லா பார்வையில் தான் வாய்க்கலாமோர் வாழ்க்கையே
யாரோடு யாரென்று யார்தான் சொல்வாரோ
(தாக்குதே..)

பார்த்த பொழுதே பூசல் தான் போக போக ஏசல் தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று ஹாப்பி
பெட்டை மொழிதான் ஆண் மொழி கொட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று வோர்க்கவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரீ
வங்கக்கடலின் ஓரத்தில் வெயில் தாழாத நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான்
(தாக்குதே..)

செல்லில் தினமும் சேட்டிங் தான் காப்பி ஷாப்பில் மீட்டிங் தான்
ஆனா போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் பற்றிக்காமல் நிற்க்கும் தான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும்பொழுதும்
தூய்மை காக்கும் தோழமைக்கு சாட்சியே வானம் பூமிதான்
(தாக்குதே..)

உன்னை காணாது - விஸ்வரூபம்


உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா

உன்னை காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேறில்லையே
நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்
உன்னை காணாமல்

உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேறில்லையே

நளினி மோகண சியாமள ரங்கா
நடன பாவ ஸ்ருதிலய கங்கா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

அவ்வாறே நோக்கினால் எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திக்கைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
ஒ பின் இருந்து வந்து எனை
பம்பரமாக சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாய்யன் எந்தன் வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாளடி

உடலணிந்த ஆடை போல் எனை அணிந்து கொள்வாயா இனி நீ
இனி நீ கண்ணா
தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான்
இனி நீ இனி நீ
இது நேராமலே நான்
உன்னை பாராமலே நான்
இந்த முழுஜென்மம் போயிருந்தால்
என்றும் அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே
உன்னை மூச்சாகி வாழ்வேனடா

மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா
காமக் கலைஞன் கண்ணா
கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா



Friday, 15 February 2013

மழைத்துளி மழைத்துளி - சங்கமம்


       மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
       உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
       உடல் பொருள் ஆவியெல்லாம் 
   கலையில் சங்கமம் சங்கமம்
       (மழைத்துளி மழைத்துளி..)
       ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்கு சலங்கையிட்ட 
   உன் காலடிக்கு முதல் வணக்கம்
       என் கால் நடமாடுமையா உம்ம 
   கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
       (என் காலுக்கு சலங்கையிட்ட)
       நீ உண்டு உண்டு என்றபோதும் 
   அட இல்லை இல்லை என்றபோதும்
       சபை ஆடிய பாதமய்யா 
   அது நிக்காது ஒருபோதும்

       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

       (மழைத்துளி மழைத்துளி...)


       தண்ணியில மீனழுதா கரைக்கொரு 
   தகவலும் வருவதில்லை
       எனக்குள்ள நானழுதா துடைக்கவே 
   எனக்கொரு நாதியில்ல‌
       என் கண்ணீ்ர் ஒவ்வொரு சொட்டும் 
   வைரம் வைரமாகுமே
       சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
        ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
        மனமே மனமே சபதம் 
   வெல்லும் மட்டும் சாயாதிரு
       விழியே விழியே இமையே 
   தீயும் போதும் கலங்காதிரு
       கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
       நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
       கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
       (மழைத்துளி மழைத்துளி...)
       (ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

       தந்தான தந்தானனா..
       மழைக்காகத் தான் மேகம்  அட கலைக்காகத் தான் நீயும்
       உயிர்  கலந்தாடுவோம் நாளும் மகனே வா
       நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
       இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
       ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
       தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்
       புலிகள் அழுவது ஏது  அட பறவையும் அழ அறியாது
       போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
       மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
       கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது
       ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌
       என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌
       என் காலுக்குச் சலங்கையிட்ட 
   உன் காலடிக்கு முதல்வணக்கம்
       என் கால் நடமாடுமையா நம்ம 
   கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
       நீ உண்டு உண்டு என்ற போதும்
       நீ உண்டு உண்டு என்ற போதும் 
   அட இல்லை இல்லை என்ற போதும்
       சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்
      மழைத்துளி மழைத்துளி...

யாரோ மனச - வேங்கை


யாரோ மனசு உலுக்க 
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க 
நீயோ மௌனமாக

ஒரே ஒரு வார்த்தைக்காக ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக என்னாலும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடிக்காக உன்னோடுதான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாய்வேன்
ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உள்ளுர கரைகிறதே

யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக

ஓ சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஓர் இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
உறவா நெனச்ச உள்ளம் இப்போ போராடுதே
ஒரே ஒரு வார்த்தை கேட்டு  நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலாய் என் மேலே அடிச்சிருச்சே
உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலென்னும் பேரைச் சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இதுதான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா
ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே
ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனசு உலுக்க ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க நீயோ மௌனமாக

சஹானா சாரல் - சிவாஜி


சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ (2)


சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ
 என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ