Saturday, 9 February 2013

அடியே அடியே - கடல்


மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறனே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

மீனத் தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

உன் கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்துப் போறாயே நீ

சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?


Monday, 4 February 2013

ஆஹா என்பார்கள் - வசீகரா


பேரழகி  என்றேதான்
பெண்  அவளை  சொன்னாலோ
சூரியனை  பிறை  என்று
சொல்லுவதை  போலே  ஆகும்

ஆஹா  என்பார்கள்
அடடா  என்பார்கள்
அவளை  பார்த்த  எல்லோரும்
மூன்றே  வினாடி
அவளை  கண்டாலே
நெஞ்சை  தாக்கும்  மின்சாரம்  (2)

மூச்சு  விடும்  ரோஜா  பூ
பார்த்ததில்லை  யாரும்தான்
அவளை  வந்து  பார்த்தாலே
அந்த  குறை  தீரும்தான்

ஆஹா  என்பார்கள் 
ரப்  பாப்  பா ....

ஹே , பதினேழு  வயது  முதல்  வரும்
பதினெட்டு  வயது  வரை  பெரும்
மாற்றங்கள்  அத்தனையும் அவள்
அழகை  கூட்டி  விடுதே
பார்வைக்கு  பட்ட  இடம்  அங்கும்
பார்க்காமல்  விட்ட  இடம்  எங்கும்
பாதாமின்  வண்ணம்  அது  பொங்கும்
கண்களுக்குள்  சூடுதே -ஏ -ஏ
ஒரு  ஐநூறு  நாளான  தேன்  ஆனது
அவள்  செந்தூரம் சேர்கின்ற  இதழ்  ஆனது
ஷாபப்ப .....
ஆஹா  என்பார்கள் 

ஹே   ஹே  ஹே , போர்க்கப்பல்  போல  இரு  இமை
மீன்  தொட்டி  போல  இரு  விழி
பால்  சிப்பி  போல  இரு  இதழ்
சேர்ந்த  அழகி  அவள்தான்
மின்காந்தம் போல  ஒரு  முகம்
ஊசிப்பூ  போல  ஒரு  இடை
தந்தத்தூண்  போல  ஒரு  உடல்
கொண்ட  மங்கை  அவள்தான்
அவள்  அழகென்ற  வார்த்தைக்கு  அகராதிதான்
நான்  சொல்கின்ற  எல்லாமே  ஒரு  பாதிதான் 

ஆஹா  என்பார்கள்
அடடா  என்பார்கள்
அவளை  பார்த்த  எல்லோரும்
மூன்றே  வினாடி
அவளை  கண்டாலே
நெஞ்சை  தாக்கும்  மின்சாரம்

மூச்சு  விடும்  ரோஜா  பூ
பார்த்ததில்லை  யாரும்தான்
அவளை  வந்து  பார்த்தாலே
அந்த  குறை  தீரும்தான்

ரப்  பாப்  பா .... 

நினைவுகள் நெஞ்சினில் - ஆட்டோகிராப்


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை 

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய் மொழியை
கஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டு பேசியவன்

நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
என்னை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தை கூட எரிக்கிறதே
சுவாசிக்கக்கூட முடியவில்லை
என்னை வாசிக்க மண்ணில் எவருமில்லை  
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை 

ஆழ்வார்பேட்டை ஆளுடா - வசூல்ராஜா MBBS


ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ணு காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஒஹ் ஒஹ்
ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை
ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையாடா
பன்னெண்டு வயசில் மனசு பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்ல அதன் பேர் லவ் இல்ல
கண்ண பார்த்து பேச சொல்லும்
கழுத்துக்குக் கீழ் பார்க்குமே
லவ் இல்ல அதன் பேர் லவ் இல்ல
கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது
உன் கனவில கிளியோபாட்ரா வந்தா லவ் இல்ல
ஜவுளிக் கடை பொம்மைய பார்க்கும்போது
உன் புத்திக்குள்ள கெவுளிக் கத்தும் அதுவும் லவ் இல்ல
இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும்
எது நிஜம் புரிஞ்சி நடக்கணும்
காதல் ஒன்னியும் கடவுள் இல்லடா
இந்த இழவு எல்லாம்
ஹார்மோன் செய்யும் கலகம் தானடா
ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையாடா
காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
பார்க்கப்போனா மனுஷனுக்கு பர்ஸ்ட் தோல்வி காதல்தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமையெல்லாம் பர்ஸ்டுக்கான தோல்விதான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
டாவுக்கட்டி தோத்துப் போனவனெல்லாம் கண் மூடிட்டா
ஒட்டு போட ஆளே இல்லையடா 
ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா 
அய்யய்யோ இதுக்கா அழுவுற லைப்புல எண்டா நழுவுற
காதல் ஒரு கடலு மாறிடா
அத மறந்திட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா டேய் டேய்  
ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையாடா
காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ணு காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஒஹ் ஒஹ்
ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
லவ் பண்ணுடா மவனே
தாவணி போனால் சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே



அது ஒரு காலம் - அதே நேரம் அதே இடம்

அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையன யாவும் மறந்திடு நீயும்
சிரித்திட தானே பிறந்தது நீயும் நானும்

ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா 
முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா
ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும்
துன்பம் தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும்

அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையன யாவும் மறந்திடு நீயும்
சிரித்திட தானே பிறந்தது நீயும் நானும்

ஹே இதயம் என்பது வீடு ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீமூட்டி போனாள்
உலகம் என்பது மேடை தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதி போலே ஓடு
நெஞ்சோடு பாரம் தந்தாள்
தூரத்தில் தூக்கி போடு
கண்ணோடு ஈரம் தந்தாள்
இன்னொரு பெண்ணை தேடு
ஒஹ் நான் போக பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலி கூற வார்த்தை ஏது
எல்லாம் மறக்கலாம்
எனக்கே எனக்கே அவளென்று வாழ்ந்தேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்ந்தேன் 
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையன யாவும் மறந்திடு நீயும்
சிரித்திட தானே பிறந்தது நீயும் நானும்

அவளை பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆனேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஒஹ் பழக தெரியும் வாழ்வில் விலக தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காட்டாற்று நீச்சல் காதல்
கை தர வந்தேன் நானே
ஒஹ் ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மருந்துடா
உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையன யாவும் மறந்திடு நீயும்
சிரித்திட தானே பிறந்தது நீயும் நானும்

ஹே ஜோடியாய் இருந்தாள் ஒற்றையாய் விடத்தானா 
முத்துப்போல் சிரித்தாள் மொத்தமாய் அழத்தானா
ஹே துள்ளித்தான் திரியும் பிள்ளையாய் இரு நீயும்
துன்பம் தான் மறந்து பட்டம் போல் பற எப்போதும்