Saturday, 5 January 2013

சற்று முன்பு - நீதானே என் பொன்வசந்தம்


சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதை சொல்
ஒஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத் தானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஒரு நதியென இன்று நானடா
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் இன்று காண வாடா
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதை சொல்
ஒஹோ உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ ஹோ

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

எப்போ புள்ள - கும்கி


நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற
நீ எப்போ புள்ள சொல்ல போற
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற

நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

பக்குவமா சோறாக்கி பட்டினிய நீ போக்கி
பெத்தவள கண் முன்னெ கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம் எதிலேயும் இல்ல வேஷம்
என் மேலே என்ன பூவே ரோஷம்
முள்ளாச்சே முல்லை வாசம் வச்சேனே அள்ளி நேசம்
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற

வெள்ளி நிலா வானோட வெத்தலையும் வாயோட
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே
யம்மாடி என்ன சொல்ல அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னொட கண்ணுகுள்ள கண்ணீரும் சிந்த இல்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற
வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு
சொல்ல பதிலேதும் இல்லேன்னா அடியோடு கொல்லு

நீ எப்போ நீ எப்போ
நீ எப்போ புள்ள சொல்ல போற 

என்னோடு வா வா - நீதானே என் பொன்வசந்தம்


என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு வா வா என்று
சொல்ல மாட்டேன் போக மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்க தானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்க தானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும் தீயாக பார்காதடி
சின்ன பிள்ளை போல நீ அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களை தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கணக்கும்  பயந்து நடுங்கும்

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு வா வா என்று
சொல்ல மாட்டேன் போக மாட்டேன்

காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைக்கனமே
காதல் அதை பொறுக்கனுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டுமடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே

என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்...

ஒன்னும் புரியல - கும்கி


ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில சூடு ஏறுதே
நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு றெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே
மனம் புத்தி தாவியே தறிக் கேட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

அலையிற பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது
பரவுர நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது
அவளது திருமேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழிக் காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோணுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல ஆசை கூடுதே

கதிர் அருவாளா மனசையும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ ஒருமாரி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி மாறுது
ஹேய் ஹேய் ஏ லலே

ஒன்னும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல

Thursday, 6 December 2012

மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது.. 
என் மாளிகை அது வெந்து போனது! 
மின்னலே என் வானம் உன்னை தேடுதே!!

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது.. 
என் மாளிகை அது வெந்து போனது! 
மின்னலே என் வானம் உன்னை தேடுதே!!

கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே 
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே 
கண் விழித்து பார்த்தபோது கலைந்த வண்ணமே 
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே 
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே 
இன்று சிதறி போன சில்லிலெல்லாம் உனது பிம்பமே  
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் 
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் 

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது.. 
என் மாளிகை அது வெந்து போனது! 
ஒ மின்னலே என் வானம் உன்னை தேடுதே!!

பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா  
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா 
பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா  
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா 
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா 
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் 
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் 

மின்னலே நீ வந்ததேனடி 
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி..
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி..
சில நாழிகை நீ வந்து போனது.. 
என் மாளிகை அது வெந்து போனது! 
மின்னலே என் வானம் உன்னை தேடுதே!!