Saturday 4 January 2014

என்னைச் சாய்த்தாளே - என்றென்றும் புன்னகை

என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

நேற்று போலே வானம் அட இன்று கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்
தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்
பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்
பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பதில் தேகம்
செங்காந்தள் போல் காயும்
காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்
தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டி வைத்துக் கொண்டேன்
கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்

என்னைச் சாய்த்தாளே ....

No comments:

Post a Comment