Wednesday, 1 May 2013

சக்கரை நிலவே - யூத்


சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே

மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா?

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா ?

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?

என்ன என்ன ஆகிறேன் - காதல் சொல்ல வந்தேன்


என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

பார்வையில் உந்தன் யோசனை புரிந்து சேவையாவும் செய்வேன்
உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் எது சுகம், பெண்ணே உந்தன் முகம்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காயல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்

விதை என அன்று விழுந்தது, வளர்ந்து விருட்சம் ஆகும் நேரம்
கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதல் ஆக மாறும்
எதை விரும்பினேன், அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்ன கேக்கிறேன், செத்தாலும் உன் மடி, தந்தாலே நிம்மதி

காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதி ஆனதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே

என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடிதிதுடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன் 


Tuesday, 30 April 2013

காதல் ரோஜாவே


காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

கண்ணாளனே - பாம்பே


சலசலசலசல சோலை கிளியே ஜோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
கண்ணாளனே....

ஏமாத்திட்டா - யாருடா மகேஷ்


மச்சி இத கேளேன்
மேட்சுக்கே போல மச்சி
மேன் ஆஃப் த மேட்ச்
எப்புடி மச்சி
மனசு நூடுல்ஸ் ஆச்சு மச்சி
பொண்ணுங்கன்னா வெறுத்து போச்சு மச்சி
சரக்கு வேற பத்தல மச்சி
ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா  
மேட்சுக்கே போல மச்சி
மேன் ஆஃப் த மேட்ச்
எப்புடி மச்சி
மனசு நூடுல்ஸ் ஆச்சு
பொண்ணுங்கன்னா வெறுத்து போச்சு

முதல் நாள் விழுந்தவந்தான்
எழுந்து நிக்க நேரம் ஆச்சு
முழுசா மர கழண்டு
மூளை இப்போ மெண்டல் ஆச்சு

ஸ்கூட்டி ஒட்டி வந்து ஏத்திக்கிட்டு போனா மச்சி
கூட்டி போன இடம் DEAD – ENDன்னு புரிஞ்சுப்போச்சு
ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா
அவ என்னை ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா

FACEBOOK STATUS- FOLLOW பண்ண வைச்சா மச்சி
FACE – ஏ காணோம்னு புலம்புறேனே இப்போ மச்சி
டைப் – ஆ சிரிக்கும்போது டவுட் ஏதும் இல்ல மச்சி
QUIET – ஆ டைட்டானிக்கா கவுத்துப்புட்டு போய்ட்டா மச்சி

டைட்டா ஜீன்ஸ் போட்டா சூப்பருன்னு சொன்னா மச்சி
அங்கங்க ஜீன்ஸ் போல கிழிச்சுப்புட்டா ஏன்டா மச்சி

ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா அவ என்னை

ஹே மாமு ...
கர்ட் ரைஸ் புடிக்கும்னு கேட்டு வாங்கி தின்பா மச்சி
உருக்கு வெண்ணைய போல் வழிச்சுப்புட்டு போய்ட்டா மச்சி

சார்லி சாப்ளின் படம் போட்டு போட்டு பாப்பா மச்சி
ஜோக்கர் ஆக்கிபுட்டு சீக்ரெட்டா போய்ட்டா மச்சி

லேட்டா வீட்டுக்கு வந்தா கோபப்பட்டு நிப்பா மச்சி
லேட்டா புரிஞ்சுகிட்டேன் ஐயோ அவ வேணாம் மச்சி
ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா அவ என்னை

ஷாப்பிங் கூட்டிபோனா கால்கடுக்க நிப்பேன் மச்சி
பர்ஸ் பஞ்சர் ஆச்சி சொத்த எல்லாம் வித்தேன் மச்சி

மேப்பில் இல்லாத COUNTRY- க்கு போலாம்னு சொல்லுவா மச்சி
கேப்பில் ஆப்பு வச்சு வேற எங்கோ போய்ட்டா மச்சி

மச்சி இத கேளு
வாடா செல்லமுன்னு பேபியின்னு சொல்வா மச்சி
போடா பொண்ணுங்கெல்லாம் காரமான மிளகாபஜ்ஜி

அய்யய்யோ உறவு போச்சு உலகம் போச்சு சுத்தி சுத்தி
சுத்தி திரியுற எனக்கு எதுவுமே புரியல

ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா

ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா மச்சான் மச்சான்
ஏமாத்திட்டா என்னையே ஏமாத்திட்டா மச்சான்
ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா மச்சான் மச்சான்
ஏமாத்திட்டா என்னையே ஏமாத்திட்டா மச்சான்
ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா மச்சான் மச்சான்
ஏமாத்திட்டா என்னையே ஏமாத்திட்டா மச்சான்
ஏமாத்திட்டா ஏமாத்திட்டா ஏமாத்திட்டா மச்சான் மச்சான்
ஏமாத்திட்டா ஏமாத்திட்டா என்னையே ஏமாத்திட்டா மச்சான்
மச்சி பொண்ணுங்கள நம்பாதிங்கடா