Friday, 15 February 2013

காதலின் தீபம்


காதலின் தீபம் ஒன்று,
ஏற்றினாளே என் நெஞ்சில்.
ஊடலில் வந்த சொந்தம்,
கூடலில் கண்ட இன்பம்.
மயக்கம் என்ன,காதல் வாழ்க.

நேற்று போல் இன்று இல்லை,
இன்று போல் நாளை இல்லை.
அன்பிலே வாழும் நெஞ்சில்,
ஆயிரம் பாடலே.
ஒன்றுதான் எண்ணம் என்றால்,
உறவு தான் ராகமே.
எண்ணம் யாவும் சொல்லவா.

(காதலின் தீபம் ஒன்று)

என்னை நான் தேடி தேடி,
உன்னிடம் கண்டுக் கொண்டேன்.
பொன்னிலே பூவை அள்ளும்,
புன்னகை மின்னுதே.
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே.
அன்பே இன்பம் சொல்ல வா.

(காதலின் தீபம் ஒன்று)

வெண்ணிலவே வெண்ணிலவே - மின்சார கனவு


வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை


விழிகளில் விழிகளில் - திருவிளையாடல் ஆரம்பம்

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
(I just Need Your LOVE)
காதல் என் காதில் சொல்வாய்
(Just Just Give Me LOVE)

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்


சாலையில் நீ போகயிலே
மரம் எல்லம் கூடி
முணுமுணுக்கும்

காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவம் இருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி

ஒரு கார்பன் தாள் என
கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்

அந்த காதலை நானும்
வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்

போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ் நாள் சொற்பமே

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

பூவிலே (பூவிலே)
செய்த சிலை அல்லவா
பூமியே (பூமியே)
உனக்கு விலை அல்லவா
தேவதை (தேவதை)
உந்தன் அருகினிலே
வாழ்வதே (வாழ்வதே)
எனக்கு வரம் அல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி

உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி

இன்றோடு அடி இன்றோடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவித் தான்
என் பொழுதும் விடிந்ததே

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்


அஞ்சலி அஞ்சலி - டூயட்


அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி
(அஞ்சலி ...)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

(பூவே ...)

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி ...

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ்வாழ கவிதாஞ்சலி

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா ?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா ?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி ...

(பூவே ...)

அழகே சுகமா


அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா
தலைவா சுகமா சுகமா? உன் தனிமை சுகமா சுகமா
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா
(அன்பே)
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன்
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன்

பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா