Tuesday, 22 January 2013

என்னவளே அடி என்னவளே - காதலன்


என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

என்னை காணவில்லையே - காதல் தேசம்


அன்பே..

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..


நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்த காதலென்றால்

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

அன்பே அன்பே கொல்லாதே - ஜீன்ஸ்


அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி

மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி

இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா

கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
  

லவ் லெட்டர் - கண்ணா லட்டு தின்ன ஆசையா


லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்
இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்
கொடுக்க முடியல

கானா கத்துக்க வந்தேன் நானு உங்க வீட்டில
பெட்ரோல் இல்லாத காராட்டம் நின்னேன் ரோட்டுல

லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்
இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்
கொடுக்க முடியல

உன் சித்தி டார்ச்சர நான் தாங்கி
உன் சித்தப்பன் கிட்ட அடிவாங்கி
லவ் பண்ணேன் உன்னைத்தான்
உன் தம்பி வந்தான் எமனாட்டம்
தினமும் எனக்கு போராட்டம்
கிழிஞ்சு போச்சு என் பெல்பாட்டம்

தொரத்தி தொரத்தி காதலிச்சேன்
வெறி பிடிச்ச நாயாட்டம்
எகிறி குதிச்சு ஒடுறியே
வண்டலூரு மானாட்டம்

நான் அப்பாடக்கரு
இந்தா வங்கிக்க லெட்டரு

அன்ன நடை போடாத
என்ன ஆட்டிபடைக்காத
என் வொய்ப்பா வந்திடு
ஆசைய மூடி மறைக்காத
உங்கப்பன் பேச்சை மதிக்காத
ஐ லவ் யூ சொல்லிடு 

விளம்பரத்த பாத்துக்கிட்டு
விழுந்திடாத ஆத்துக்குள்ள
நடனமாடி காட்டிடுவான்
மாட்டிக்காத சேத்துக்குள்ள
அவன் சைனா மேடு மா
இவன் பக்கா பிராடு மா
அவன் சைனா மேடு மா
இவன் பக்கா பிராடு மா

Birthday - கண்ணா லட்டு தின்ன ஆசையா


Hello everybody
twinkle twinkle little star
happy birthday powerstar

பவரு பவரு பவரு பவரு
பவரு பவரு பவரு பவரு

stop it stupid
it is not my death day
it is my birthday
change the music
and start the run
okay

we wanna wish you its your birthday
blow up the candles its your birthday birthday
blackforest cake wish you birthday
rhythm back its you birthday birthday


we wanna wish you its your birthday


அண்ணன்னா அண்ணன் தான்
ஔவையார் அண்ணன்தான்
காரைக்கால் அம்மையார்
காலத்து மன்னன்தான் மாமே 

its your birthday
its your birthday

ஹே முத்தின கத்திரி
அஞ்சு நாள் பிஞ்சு போல்
சந்தைக்கு வந்ததே
விந்தைதான் மாமே

ஒருத்தி நினைப்பதும் நீதான்
வருத்தி வதைக்கையில் நீதான்
என் நண்பா.. நீ என் தோழா
வயதை மறைப்பதனாலே
வலையில் மான் வந்து விழுமா மாமே

we wanna wish you its your birthday
blow up the candles its your birthday birthday
blackforest cake wish you birthday

அண்ணன்னா அண்ணன் தான்
ஔவையார் அண்ணன்தான்
காரைக்கால் அம்மையார்
காலத்து மன்னன்தான் மாமே 

its your birthday
its your birthday

வெட்டி பந்தா வெட்டி பந்தா
வேட்டி அவுந்தா வேட்டி அவுந்தா
ஜிகருதண்டா ஜிகருதண்டா
பவருதாண்டா பவருதாண்டா

பவரு இருக்குது கையில கையில
பணமும் இருக்குது பையில பையில
எடுத்து வழங்குற வள்ளலே வள்ளலே
எதுக்கு உனக்கிந்த துள்ளலே துள்ளலே

ரஜினி கமலுனு எண்ணுற எண்ணுற
ரௌசு ரொம்ப தான் பண்ணுற பண்ணுற
அவஸ்தைபடுத்துது ஆசை
அதுக்கு இறைக்கிற காச
என் நண்பா...நீ என் தோழா
இறுதிவரைக்கும் தான் ஹாஃப்  
இழுக்க வரைக்கும் தான் ஜாஃப் நண்பா
பவரு பவரு பவரு பவரு
பவரு பவரு பவரு பவரு
பவரு பவரு பவரு பவரு
பவரு பவரு பவரு பவரு
வெட்டி பந்தா வெட்டி பந்தா
வேட்டி அவுந்தா வேட்டி அவுந்தா
ஜிகருதண்டா ஜிகருதண்டா
பவருதாண்டா பவருதாண்டா


உலகம் பிறந்தது எப்படா எப்படா
உனக்கு பிறப்புமே அப்படா அப்படா
வயசு கணக்கெல்லாம் தப்படா தப்படா
மனச அறிஞ்சு நீ செப்படா செப்படா

பருவம் கொடுத்ததே மப்படா மப்படா
பாத்து நடடா நீ சப்படா சப்படா
இளமை முடிஞ்சதும் பேக்அப்
எதுக்கு முகத்துக்கு மேக்அப்
என் நண்பா....நீ என் தோழா...
இளைஞன் ஜெய்ப்பத பார்த்து
இருந்து சபையில வாழ்த்து நண்பா
அண்ணன்னா அண்ணன் தான்
ஔவையார் அண்ணன்தான்
காரைக்கால் அம்மையார்
காலத்து மன்னன்தான் மாமே 


its your birthday
its your birthday


ஹே முத்தின கத்திரி
அஞ்சு நாள் பிஞ்சு போல்
சந்தைக்கு வந்ததே
விந்தைதான் மாமே

வெட்டி பந்தா வெட்டி பந்தா
வேட்டி அவுந்தா வேட்டி அவுந்தா
ஜிகருதண்டா ஜிகருதண்டா
பவருதாண்டா பவருதாண்டா

we wanna wish you its your birthday..
maame maame..