Monday, 13 August 2012

போ நீ போ - 3


                             
போ நீ போ
போ நீ போ 
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம்
அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்
தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம்
அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்
தூரம் போ
உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாய் மறவேனே பெண்ணே
இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளிலே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ  ஒ
போ நீ போ
போடி போ
என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம்
அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்
தூரம் போ
  

நினைத்து நினைத்து பார்த்தேன்


நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்து போன பார்வைகளெல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்!  

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகமல்லவா
நெருப்பை விழுங்கிவிட்டேன்
ஒ அமிலம் அருந்துவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய்
பூ பறித்தவள் நீதானே 
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
பெண்களின் உள்ளம் படுகுழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஒ கரையை கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில்தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதமானேன்!!!
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
    


  

ஏதோ ஒன்று என்னை தாக்க - பையா


ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுத்தி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
ஏதும் இல்லையே என்னிடத்தில் 
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிப் போனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என் உயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான் ஒஹ்ஹ்ஹ்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னையும் பார்க்க
சுத்தி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே
   

என்ன சொல்ல போற - வேங்கை


உன்னை மட்டும் நெஞ்சிக்குள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
வீணாக இவன் மனச கொல்லாத  நீ கொல்லாத
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்போ சொல்ல போற நீ எப்போ சொல்ல போற
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்போ சொல்ல போற நீ எப்போ சொல்ல போற
காத்திருப்பேன் காத்திருப்பேன் ஆறு மாசம்தான்
கண் முழிச்சு படுத்திருப்பேன் மூணு மாசம்தான்
என்னமோ நடக்குது இதயம் வலிக்குது மனசு தவிக்குது
உன்னோட என் வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்போ சொல்ல போற நீ எப்போ சொல்ல போற
உன்னை மட்டும் நெஞ்சிக்குள்ள வச்சிருக்கான்  இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
வீணாக இவன் மனச கொல்லாத  நீ கொல்லாத
சின்ன புள்ள நேசமிது பச்சை புள்ள பாசமிது
என் மனச தாக்கியது முன்னால முன்னால
ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்த கேட்கலையே
காதலுனு ஆயிடுச்சு தன்னால தன்னால
நெசமா நெசமா நெஞ்சுக்குள்ள நான் அழுதேன்
உன்னுடைய  வார்த்தைக்காக  
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்போ சொல்ல போற நீ எப்போ சொல்ல போற
உன்னை மட்டும் நெஞ்சிக்குள்ள வச்சிருக்கான்  இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
வீணாக இவன் மனச கொல்லாத  நீ கொல்லாத
வெட்டருவா தூக்கிகிட்டு வெட்டி பைய போலருந்தேன்
வெக்க பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால
கட்ட கம்ப தூக்கிக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன்
உன்னுடைய பார்வையால
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்போ சொல்ல போற நீ எப்போ சொல்ல போற
உன்னை மட்டும் நெஞ்சிக்குள்ள வச்சிருக்கான்  இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பயபுள்ள
வீணாக இவன் மனச கொல்லாத  நீ கொல்லாத