Saturday, 24 February 2018

மறுவார்த்தை பேசாதே - என்னை நோக்கி பாயும் தோட்டா


மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே

விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்

மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்

முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்

இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்

பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்

மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே


மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு

Monday, 19 February 2018

ராஜாளி நீ காலி - 2.0


ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.

ஐஸா கசுமோ பேரன்டா
சுண்டக் காசாய் சூரண்டா.





ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாலி.

ராஜாளி
செம்ம ஜாலே.

நரகத்துக்கு நீ
விருந்தாளி.

மாசே நா பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.

பாஸு நா குட்ட பாசு
மாட்டிக்கிட்டா
மச்சான் நீ பூட்ட கேசு.

நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.

நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.

நக நக நக நா
ஆறே அங்குல பீரங்கி
நீ உள்ளங்கி.

நக நக நக நா
தானியங்கி உன் காதுல
வச்ச சம்பங்கி.

நக நக நக நா
ரன்கூஸ்கி உன்
தூது வந்தா
சங்குஸ்கி.

பொடி பொடி பொடி நான்
மூக்குப் பொடி.

ஓன் மூக்குல புகுந்தேன்
தாக்குப் புடி.

ராஜாளி நீ காலி
இன்னைக்கும் திங்களுக்கு
தீபாலி.

ராஜாளே
செம்ம ஜாலே.

நரகத்துக்கு
நீ விருந்தாளி.

மாஸு நான் பொடி மாசே
வெடிச்சாக்க
பூப் பட்டாசு.

பாஸு நா குட்டப் பாஸு
மாட்டிக் கிட்டா மச்சா நீ
பூட்டக் கேசு.

ஒஹ் ஹோ
பட்சி சிக்கி கிச்சோ.

ஒஹ்
ரெக்க பிச்சிக் கிச்சோ.

ஒஹ்
உன்ன முறச்சி கிச்சோ.

அச்சச்சோ.

எந்திர லோகத்து சுந்தரியே - 2.0


என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

எந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை சிந்துறியே
என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே

ரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைகட்டா
புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா
சுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடடா
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

எந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை சிந்துறியே
என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே


என் சென்சார்கு உணவும் உணர்வும் நீ
என் கேபிள் வலி தரவும் தரவும் நீ
என் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ
என்னுள் எல்லாம் நிறையும் நிலவும் நீ
என் போகும் வடிவே, என் கடவு சொல்லே
என் பணிமடை கணினி ரஜினி நீ

ஹஹஹா


இலகும் இலகும் இரும்பும் நீ
இன்றே உருகி ஒன்றாய் ஆவோம் நாம்

ஆல்பா என் ஆல்பா நீதான் இனி
மெகா ஒமேகா நீதான் இனி
லவ் யு ப்ரம் ஜீரோ டு இன்பினிட்டி

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே

எந்திர லோகத்து சுந்தரியே என் கலீல் காதலை சிந்துறியே
என்ஜின் நை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே

ரத்தம் அல்ல கன்னம் முத்தம் வைகட்டா
புத்தம் புது தாப ரோஜா பூக்க செய்யட்டா

சுத்தம் செய்த டேட்டா மட்டும் ஊட்டி விடடா
ஹே உன் பஸ் இன் கண்டக்டர் நான்

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

என் உயிரே உயிரே பேட்டிரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டிரியே துளியும் குறையாதே

அழகே அழகே - சைவம்


 அழகே அழகே எதுவும் அழகே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு ! 
சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! 
விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மை அதுதான் நீதான் அழகு !

குயிலிசை அது பாடிட 
ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட 
  ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !

அழகே அழகே எதுவும் அழகே

இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே !?
நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !
அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு !

அழகே அழகே…..
மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
மன்னிக்கச் சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மையில் அதுதான் விழியாய் அழகு !


கொஞ்சிப் பேசிட வேணாம் - சேதுபதி


கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி
தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்
போகும் நேரம்

ஆச விலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே
வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்

கொஞ்சிப் பேச வேணாம்
நான் நின்னா
தூரமே
கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா