Monday, September 15, 2014

விண்மீன் விதையில் - தெகிடி

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
ஒரு பெண்ணாக உன் மேல்
நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போனேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்


என் தாரா - திருமணம் எனும் நிக்காஹ்

என் தாரா என் தாரா
நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண் பூரா கண் பூரா
நீயே தான் தாரா
கண்ணார காண்கிறேன் பூரா
தண்ணீரை கூசிகொண்டே
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீ ஆகிறாய்
எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
உன் தாரா உன் தாரா
நானே உன் தாரா
என் வானம் பூத்ததே சீரா
கண் பூரா கண் பூரா
நீயே தான் தீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரை கூசிகொண்டே
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீ ஆகிறாய்
எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாம் என்னும் நாமோ
தூண்டிலா நீ ஊஞ்சலா
தூரலா நீ கானலா
பிரத்தியேக மௌனம்
நீ கொண்டு வந்தாய்
என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில்
இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே
நம் காதல் வாழுமே
உன் அசைவினில் என் திசைகளை
பட படவென தந்தாய்
மின்மினிகளை உன் விழிகளில்
கொண்டாய்
கண் இமைகளில் என் இரவினை
கத கதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில் வெண்ணில ஒளி
தந்தாய்
பிரம்மாண்ட காலம்
நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் பாத சூட்டில்
என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே
என் தாரா என் தாரா
நீயே என் தாரா
என் வானம் பூத்ததே
தாரா
கண் பூரா கண் பூரா
நீயே தான் தாரா
கண்ணார காண்கிறேன்
தாரா
தண்ணீரை கூசிகொண்டே
மெல்ல செல்லும்
பிம்பங்கள் நீ ஆகிறாய்
எதிரே
என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல
வெட்கங்கள் பேசுதே


யாரோ இவள் - திருமணம் எனும் நிக்காஹ்

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ
என்னென்ன பேச எப்படி பேச
ஒத்திகைப் பார்த்தேனே
நீ புன்னகை பூத்தால்
பத்திரமாக சேமித்து வைப்பேனே
இன்று பூமியில் பூக்கும்
வானவில் வண்ணம் கண்முன்னே கண்டாச்சோ
அதில் சந்தனம் கொஞ்சம் மஞ்சளை
சேர்த்தால் உன் முகம் உண்டாச்சோ

ஏதோ ஒரு ஏதோ ஒரு
மாயம் கண்டேன் என் முன்னே
உண்மை என்று தோன்றும் வரை
பார்த்துக்கொண்டே நின்றேனே
எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
இது நெளிந்த பாதை
எப்படிச் செல்லும் சொல்லிட மாட்டாயா
மேலே போடும் நிலாப் பிறை
தாண்டி என்னைப் பார்ப்பாயா
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டிட்டு
என் மன ஓசை கேட்பாயா
ஏதேதோ சொன்னாளே
நேசம் தேகம் விட்டுச் செல்லும்
வாழ்வைப் பார்த்து எல்லை மீறல்
குற்றம் கண்டு மீனைப் போல துள்ளும்

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ

நீயா இது நானா இது
உள்ளே ஒரு போராட்டம்
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து
என்றைக்கு கிடைக்கும் வெள்ளோட்டம்
நோவெல்லாம் ஓ போய்விடுமோ ஓ..
இது மனம் கொண்ட குறை
எதுவரை அரை மதிவிடும் வரை
கிட்ட தட்டக் கரை

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ
எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
ஓ மொத்தமாய் நானே
கரைந்து போகும் நிலை கொண்டேனே
இது நெளிந்த பாதை
எப்படிச் செல்லும் சொல்லிட மாட்டாயா
அடடா இந்த மௌனம் இவனைக் கொல்லும்
நீ வந்து மீட்பாயா


Tuesday, September 2, 2014

காதல் ஆசை - அஞ்சான்

காதல்  ஆசை  யாரை  விட்டதோ
உன்  ஒற்றை  பார்வை  ஓடி  வந்து 
உயிரை  தொட்டதோ

காதல்  தொல்லை  தாங்கவில்லையே
அதை  தட்டி  கேட்க  உன்னை  விட்டால்
யாரும்  இல்லையே

யோசனை மாறுமோ பேசினால் தீருமோ...
உன்னில்  என்னை  போல  காதல்  நேருமோ

ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  இளமையின்  தனிமையை  நீ  மாற்று
என்  நேரமே அன்பே 
 நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ
என்  தாகமே

காதல்  ஆசை  யாரை  விட்டதோ
உன்  ஒற்றை  பார்வை  ஓடி  வந்து 
உயிரை தொட்டதோ

காதல்  தொல்லை  தாங்க  வில்லையே
அதை  தட்டி  கேட்க  உன்னை  விட்டால்
யாரும்  இல்லையே

பகல்  இரவு பொழிகின்ற 
 பனி  துளிகள் நீ  தானே
வயதினை  நனைக்கிறாய் 
உயிர் நெஞ்சில் இனிக்கிறாய்
நினைவுகளில்  மொய்க்காதே 
நிமிட  முள்ளில் தைக்காதே
அலையென  குதிக்கிறேன் 
உலையென கொதிக்கிறேன்
வீடு  தாண்டி  வருவேன் 
கூப்பிடும் நேரத்தில்
உன்னால்  விக்கல்  வருதே 
ஏழு  நாள் வாரத்தில்
ஏழு  நாள் வாரத்தில்
ஒரு  பார்வை  பாரு  கண்ணின்  ஓரத்தில்

ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  இளமையின்   தனிமையை  நீ  மாற்று
என்  நேரமே அன்பே 
நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ
என்  தாகமே

விழிகளிலே  உன்  தேடல் 
செவிகளிலே உன்  பாடல்
இரண்டுக்கும்  நடுவிலே 
இதயத்தின் உரையாடல்
காதலுக்கு  விலையில்லை 
எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில்  அள்ளி  தர 
என்னை   விட ஏதுமில்லை
யாரை  கேட்டு   வருமோ 
காதலின் நியாபகம்
என்னை  பார்த்த  பிறகும் 
ஏன்  இந்த தாமதம்
ஏன்  இந்த  தாமதம்
நீ  எப்போ  சொல்வாய்  காதல்  சம்மதம்

ஒரு  குழந்தையின்  மகிழ்ச்சியை போலவே
உன்னை  விடுமுறை  தினமென  பார்கிறேன்
என்  இளமையின்  தனிமையை  நீ  மாற்று
என்  நேரமே அன்பே 


நான்  பிறந்தது  மறந்திட தோணுதே
உன்  ஒரு  முகம்  உலகமாய்  காணுதே
உன்  ஒரு  துளி  மழையினில்  தீராதோ
என்  தாகமே