Monday 15 September 2014

யாரோ இவள் - திருமணம் எனும் நிக்காஹ்

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ
என்னென்ன பேச எப்படி பேச
ஒத்திகைப் பார்த்தேனே
நீ புன்னகை பூத்தால்
பத்திரமாக சேமித்து வைப்பேனே
இன்று பூமியில் பூக்கும்
வானவில் வண்ணம் கண்முன்னே கண்டாச்சோ
அதில் சந்தனம் கொஞ்சம் மஞ்சளை
சேர்த்தால் உன் முகம் உண்டாச்சோ

ஏதோ ஒரு ஏதோ ஒரு
மாயம் கண்டேன் என் முன்னே
உண்மை என்று தோன்றும் வரை
பார்த்துக்கொண்டே நின்றேனே
எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
இது நெளிந்த பாதை
எப்படிச் செல்லும் சொல்லிட மாட்டாயா
மேலே போடும் நிலாப் பிறை
தாண்டி என்னைப் பார்ப்பாயா
சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டிட்டு
என் மன ஓசை கேட்பாயா
ஏதேதோ சொன்னாளே
நேசம் தேகம் விட்டுச் செல்லும்
வாழ்வைப் பார்த்து எல்லை மீறல்
குற்றம் கண்டு மீனைப் போல துள்ளும்

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ

நீயா இது நானா இது
உள்ளே ஒரு போராட்டம்
வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து
என்றைக்கு கிடைக்கும் வெள்ளோட்டம்
நோவெல்லாம் ஓ போய்விடுமோ ஓ..
இது மனம் கொண்ட குறை
எதுவரை அரை மதிவிடும் வரை
கிட்ட தட்டக் கரை

யாரோ இவள் யாரோ இவள்
கண்டே மனம் திக்காதோ
சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே
தொண்டைக் குழி விக்காதோ
எப்படி பேச உள்ளத்தை வீச
யோசித்து பார்த்தேனே
ஓ மொத்தமாய் நானே
கரைந்து போகும் நிலை கொண்டேனே
இது நெளிந்த பாதை
எப்படிச் செல்லும் சொல்லிட மாட்டாயா
அடடா இந்த மௌனம் இவனைக் கொல்லும்
நீ வந்து மீட்பாயா


No comments:

Post a Comment