Thursday 24 January 2013

உன் பேர் சொல்ல ஆசைதான் - மின்சார கண்ணா


உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்

உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான் உன்மேல் ஆசைதான்
(உன் பேர்...)

உன்தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் நுழைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்.
(உன் பேர்...)

கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் இந்தக் கால்கள் காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்று மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன
தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான் உன்னைப் படைத்ததாலே
(உன் பேர்...)

நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே
நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபமானால் அங்கு ஒளியுமாகிறேன்.
வானின்றி வெண்ணிலா இங்கில்லை நாமின்றி காதல் இல்லையே
காலம் மறைந்த பின்னும் கூந்தல் நரைத்தபின்னும் அன்பில் மாற்றம் இல்லையே
(உன் பேர்..) 

காதல் நீதானா


காதல் நீதானா காதல் நீதானா
உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம்
என் வானமும் என் பூமியும் உன்னிடம்
(காதல் நீதானா..)

எந்த குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?
நேரில் பார்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது
கேட்காத குயில் ஓசை கேட்குதே உன் வார்த்தயில்
நாம் பேசும் சொல்லும் கவிதை ஆகுதே நம் காதலில்
கேலண்டரில் தேத்ஹிகளை என்னுகின்றேன் நாளும்
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்
(காதல் நீதானா..)

என்ன கனவு கண்டாய் நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய் போ போ போ சொல்ல மாட்டேன் போ
கனவில் நீ செய்த குறூம்பை நேரிலே நான் செய்யவா?
கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா?
பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்
சொர்க்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம்..
(காதல் நீதானா..)

காதல் சிலுவையில்.. - சுப்ரமணியபுரம்


 காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை...
தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை...
காதல் சிலுவையில்.. அறைந்தால் என்னை...
தீயின் குடுவையில்.. அடைத்தால் கண்ணை...
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....

கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
தேவை பூமியை தினமும் தேனாக்கும்
கோபம் துயரங்களை சேர்க்கும்
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ....

அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை
கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை
இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை
தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது
காலம் உறவுகளின் தீவு
கனவுகளில் விழுந்த என்னை கவலையிட மனம் புகுகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரிதழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது... உறவுகளும் வீணோ...
உலகம் இதுதானோ.... 
(காதல் சிலுவையில்...)

Tuesday 22 January 2013

தேவதையை கண்டேன் -காதல் கொண்டேன்


தேவதையை  கண்டேன்  காதலில்  விழுந்தேன் 
என்  உயிருடன்  கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள்  நுழைந்தாள்  மூச்சினில்  நிறைந்தாள்
என்  முகவரி  மாற்றி  வைத்தாள்
ஒரு  வண்ணத்து  பூச்சி  எந்தன்  வழிதேடி  வந்தது 
அதன்  வண்ணங்கள்  மட்டும்  இங்கு  விரலோடு  உள்ளது 
தீக்குள்ளே  விரல்  வைத்தேன் 
தனித்தீவில்  கடை  வைத்தேன்
மணல்  வீடு  கட்டி  வைத்தேன்
(தேவதையை  கண்டேன் ...)
தேவதை  தேவதை  தேவதை  தேவதை
அவள்  ஒரு  தேவதை  தேவதை  தேவதை  (2)
விழி  ஓரமாய்  ஒரு  நீர்  துளி 
வழியுதே  என்  காதலி 
அதன்  ஆழங்கள்  நீ  உணர்ந்தால் 
போதும்  போதும்  போதும்
அழியாமலே  ஒரு  ஞாபகம் 
அலை  பாயுதே  என்ன  காரணம் 
அருகாமையில்  உன்  வாசம்  வீசினால்  சுவாசம் சூடேறிடும் 
கல்லறை   மேலே  பூக்கும்  பூக்கள் 
கூந்தலை  போய்  தான்  சேராதே 
எத்தனை  காதல்  எத்தனை  ஆசை 
தடுமாறுதே  தடம்  மாறுதே 
அடி  பூமி   கனவு  உடைந்து  போகுதே 
(தேவதையை கண்டேன் ...)
தோழியே  ஒரு  நேரத்தில் 
தோழிலே  நீ  சாய்கையில் 
பாவியாய்  மனம்  பாழை 
போகும்  போகும்  போகும்
சோழியாய்  என்னை  சுழற்றினாய் 
சூழ்நிலை  திசை  மாற்றினாய் 
கானலாய்  ஒரு  காதல்  கண்டேன்
கண்ணை  குருடாக்கினாய் 
காற்றினில்  கிழியும்  இலைகளுக்கெல்லாம் 
காற்றிடம்  கோபம்  கிடையாது 
உன்னிடம்  கோபம்  இங்கு  நான்  கொண்டால் 
எங்கு  போவது  என்ன  ஆவது 
எந்தன்  வாழ்வும்  தாழ்வும்  உன்னை  சேர்வது 
(தேவதையை  கண்டேன் ...)

பேசுகிறேன் பேசுகிறேன் - சத்தம் போடாதே


பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதைத் தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா....
(பேசுகிறேன்..)

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே....
வளைவில்லாமல் மலை கிடையாது
வலியில்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா.....
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னைக் காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னைத் தோண்டினால்
இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஓர் இரவேது
வடியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா...
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா..
(பேசுகிறேன்..)

காதலிக்கும் பெண்ணின் - காதலன்


காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்சம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்ம் ம்ம் பூமியின் பூபாளமே
(காதலின்..)

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் ல‌ட்ச ரூபாய்
ம்ம் ம்ம்..
(காதலிக்கும்..)

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபட்சி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
இது நட்பமாந்தோ எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று..

முஸ்தபா முஸ்தபா - காதல் தேசம்


முஸ்தபா முஸ்தபா டோண்ட் வோர்ரி முஸ்தபா
காலம் நம் தோழன் முஸ்தபா
டே பை டே டே பை டே
வாழ்க்கைப் பயணம் டே பை டே
மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா
(முஸ்தபா..)

ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்
சீனியருக்கும் ஜூனியருக்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்
ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம்
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே
(முஸ்தபா..)

இங்கு பறக்கும் வண்ணப் பறவை
எங்கு இருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும்
காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கொடைக்கானல்

கல்வி பயிலும் காலம் வரையில்
துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்
நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் ஃபேர்வல் பார்ட்டி
(முஸ்தபா..)